கன்னியாகுமாரியில் விடிய விடிய கனமழை பெய்ததாலும் விடுமுறை தினம் என்பதாலும் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் தொடர்ந்து விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் தொடர் விடுமுறை என்பதால் இன்று திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
மேலும் கோதையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதால் தண்ணீர் அதிகளவில் கொட்டுவதால் அருவியின் மெயின் பகுதியில் அனுமதிக்காமல் கட்டுபாட்டுடன் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனகா காளமேகன்







