ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் கீழ் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற
தேர்தலும் வந்தால் அன்றைக்கு தான் உண்மையான பொங்கலாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பாரிமுனை பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிமுக சார்பில்
பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
பழையன கழிதலும் புதியன புகுதலும் என கூறித்தான் போகி பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம். அதுபோலதான் வர இருக்கும் தேர்தலில் திமுக அரசு கழிந்து மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலரும். , அதற்காகத்தான் அதிமுக தொண்டர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறோம். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் சூழலில் ஒரே நாடு ஒரு தேர்தல் குறித்து அனைத்து மாநில கட்சிகளிடம் கருத்து கேட்கக்பட்ட நிலையில், அதிமுக சார்பில் இன்று பதில் அளிக்கப்பட்டு உள்ளது.
அந்த கடிதத்தில் என்ன உள்ளது என்பதை வெளியே சொல்ல முடியாது. சமிகைகள் மட்டுமே சொல்ல முடியும். ஒரே நாடு ஒரே தேர்தலை திமுக மட்டும் தான் எதிர்க்கிறது. 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் நடந்தால் உண்மையான பொங்கல் விழா அளவுக்கு இருக்கும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர் திமுகவை பொறுத்தவரை ஆளுநர் விவகாரத்தில் மாறி மாறி செயல்படுகின்றனர். அவர்களுக்கு தேவை என்றால் தேவை, இல்லை என்றால் எதிர்ப்பு என ரெண்டும் கட்டனாக இருந்து வருகின்றனர். உண்மையில் சட்டமன்ற மான்புகளையும்,மரபுகளையும் பல்வேறு முறை கடைபிடிக்காத கட்சி திமுக என்றும், எதிர்கட்சியாக இருந்த நேரத்தில் ஆளுநர் உரை மீது பல்வேறு விமர்சனங்களை கூறிய ஸ்டாலின், தற்போது ஆளுநர் மாண்பை மீறியதாக கூறி வருகிறார். ஆளுனர் உரையில் அவர்கள் எழுதி கொடுத்ததை படிக்க வேண்டும் என சொல்கிறார்கள்.
ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது. தேர்தல் வாக்குறுதிபடி நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை, கல்வி கடன் ரத்து செயபடவில்லை,மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை என குற்றம் சாட்டிய ஜெயக்குமார், ஆளுநர் உரை அன்று சட்டப்பேரவையில் நிகழ்ச்சிகள் குறித்து முன்கூட்டியே தெரிவித்து விடுவார்கள். அப்படி அலுவலில் இல்லாத ஒரு விஷயத்தை, சபாநாயகர் அன்று இருக்கையில் இல்லாத நேரத்தில் எப்படி தீர்மானம் கொண்டு வர முடியும் எனவே இது செல்லாது என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் பொங்கல் பண்டிகை என்பது சித்திரை ஒன்றாம் தேதிதான் என்றும் ஸ்டேட் பாங்க் வங்கி தேர்வை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடும் பொங்கல் பண்டிகை அன்று நடத்த கூடாது என அதிமுக நினைப்பதாகவும் கூறினார்.










