2023- க்கான வேலைத் துறை குறித்து எதிர்மறையான முன்னறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள நிலையில், சர்வதேச தொழிலாளர் அமைப்பானது (ILO) இந்த ஆண்டு வேலையின்மை விகிதம் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
உக்ரைனில் நடந்த போரின் காரணமாக பொருளாதார வீழ்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் இறுக்கமான பணவியல் கொள்கை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய வேலைவாய்ப்பு வளர்ச்சி, 2022 இல் 2% உடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 1% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே நேரத்தில், 2023 ஆம் ஆண்டில் உலகில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனிலிருந்து 208 மில்லியன் வரை, அதாவது 30 லட்சத்தில் இருந்து 20.8 கோடி வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையான பணவீக்க ஊதியத்தில் விழும் என்று ILO உலகப் போக்குகள் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான நாடுகள் உலகளாவிய தொற்றுநோயின் பொருளாதார அதிர்ச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நேரத்தில் புதிய வேலைகளின் பற்றாக்குறை மற்றும் உருமாறும் கொரோனா வைரஸ் போன்றவைகளால் சீனா மீண்டும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.
“உலகளாவிய வேலைவாய்ப்பு வளர்ச்சியின் மந்தநிலை, COVID-19 நெருக்கடியின் போது ஏற்பட்ட இழப்புகள் 2025 க்கு முன்னர் மீட்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று ILO இன் ஆராய்ச்சித் துறையின் இயக்குநரும் அதன் புதிதாக வெளியிடப்பட்ட அறிக்கையின் ஒருங்கிணைப்பாளருமான ரிச்சர்ட் சமன்ஸ் கூறினார்.
உலகில் உள்ள முறைசாரா வேலைகளின் எண்ணிக்கையை குறைப்பதில் ஏற்படும் முன்னேற்றம் வரும் ஆண்டுகளில் தலைகீழாக மாறக்கூடும் என்று ஐஎல்ஓ தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான 1.5% வளர்ச்சி என்ற முந்தைய ILO மதிப்பீட்டை விட உலகளாவிய வேலைகள் கணிப்பு குறைவாக உள்ளது.
தற்போதைய மந்த நிலையின் அர்த்தம், பல தொழிலாளர்கள் குறைந்த தரமான வேலைகளை ஏற்க வேண்டும், பெரும்பாலும் மிகக் குறைந்த ஊதியத்தில், அதிக மணிநேரம் வேலை செய்ய வேண்டும் .இதனால் அதிகமான மக்களை வறுமையில் தள்ளும் சூழல் ஏற்படும் .
இந்நிலையில் உலகப் பொருளாதாரம் மந்தமானால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பான ILO எச்சரித்துள்ளது.