முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய ஆட்டோ டிரைவர்!

முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய எம்.ஜி.ஆர் ரசிகரான ஆட்டோ ஓட்டுனர் வேலூர் பன்னீர்செல்வத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம் வேலூரில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வேலூருக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகள் முடிந்து விட்டு சென்னை திரும்பிய உடன் அவருக்கு வேலூர் மாநகர் சேண்பாக்கம் பகுதியை சார்ந்த தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான ஆட்டோ ஓட்டுனர் திரு பன்னிர்செல்வம் எழுதிய கடிதம் கிடைத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த கடிதத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது எனக்கு வாக்களித்த மற்றும் எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் ஆட்சி செய்வேன் என்று கூறினீர்கள். அந்த வகையில் உங்களின் சிறப்பான ஆட்சிக்கு உங்களுக்கு வாக்களிக்காத எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இந்த பன்னிர்செல்வத்தின் வாழ்த்துகள்.

மேலும் நீங்கள் வேலூர் வருகை தந்த போது எந்தவித போக்குவரத்து இடையூறுகள் இலாமல் நாங்கள் நிம்மதியாக ஆட்டோ ஓட்டினோம் எங்கள் தொழில் எந்த விதத்திலும் பாதிக்க வில்லை நீங்கள் வந்து சென்றதற்கான அறிகுறிகளே எங்களுக்கு தெரியவில்லை. ஆர்ப்பாட்டமில்லாமல் வந்து சென்றது எங்களை நெகிழச் செய்தது. இவை அனைத்தும் தங்களின் உத்தரவின் பேரில் தான் நடந்திருக்கும் என்பதை அறிகிறேன். மேலும் நீங்கள் பல நல்ல திட்டங்களை தந்து தமிழ்நாட்டை முன்னேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்ப்பட்டு விட்டது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

மேலும் கலைஞருடன், எம்.ஜி.ஆர் இருக்கும் புகைப்படமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எம்.ஜி.ஆர். இருக்கும் புகைப்படத்தையும் கடிதத்துடன் இணைத்து அனுப்பி இருக்கிறார். இந்த கடிதம் கிடத்த உடன் முதலமைச்சர் ஆட்டோ ஓட்டுனர் பன்னீர்செல்வத்திற்க்கு நேரடியாக போன் செய்து கடிதத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கிணற்றில் தண்ணீரை காணோம்…. புவியியல் துறை அதிகாரியிடம் புகார்

Web Editor

இஷான், சூர்யகுமார் விளாசியும் முடியல.. வெளியேறியது மும்பை

Halley Karthik

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் தொற்று: இன்று 7427 பேருக்கு பாதிப்பு!

Vandhana