தமிழ்நாட்டிற்கு தனி வேளாண் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மையில் தற்போதுள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும், தமிழ்நாட்டிற்கென வேளாண் கொள்கை ஒன்று, வேளாண் சார்ந்த அனைத்து துறைகளையும் கலந்து ஆலோசித்து உருவாக்கப்பட வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறைந்த நீரில் விவசாயிகளுக்கு அதிக வருமானம் தரக்கூடிய பயிர்களை சாகுபடி செய்வது, வேளாண் இயந்திரமயமாக்குதல், புதிய இரகங்களை அறிமுகப்படுத்துதல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, உற்பத்தி செய்த விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது, வேளாண்மையில் உள்ள அனைத்து பணிகளையும் கணினிமயமாக்குதல், விவசாயிகளுக்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் வழங்குவது, கால்நடை உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்கள் மூலம் விவசாயிகளின் வருமானம் உயர்த்தத் தேவையான உத்திகளை வகுப்பது போன்ற விபரங்களை உள்ளடக்கிய வேளாண்மைக் கொள்கை ஒன்று உருவாக்க வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.