பண்ருட்டி ஆட்டோ டிரைவர் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து அவரது கள்ளக்காதலி விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண் பூமிகா. இவர் பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் சென்று விழுப்புரம் பேருந்து நிலையத்தை அடைந்தபோது அங்கு திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை
அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரை பரிசோதனை செய்த
மருத்துவர்கள், இளம் பெண் விஷம் குடித்து இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், பூமிகா விஷம் குடித்தது தொடர்பாக விழுப்புரம் மற்றும் பண்ருட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், திடுக்கிடும் தகவல் வெளியானது. விஷம் குடித்து உயிரிழப்புக்கு முயன்ற இளம்பெண் பூமிகா திருமணம் ஆனவர். இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிடுவதில் ஆர்வமாக இருந்து வந்தார். இதன் மூலம் அவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இதற்கிடையே இளம்பெண், இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவது அவரது கணவருக்கு பிடிக்காததால் அவரை கண்டித்ததில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரைவிட்டு பிரிந்து வந்த இளம்பெண், தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இவரை பண்ருட்டி களத்துமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுமன் (26) என்பவரும் பின்தொடர்ந்தார். இதில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்தி நகர்
காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவரும், சுமனின் நண்பரான சக்திவேல் என்பவரும் இளம்பெண்ணுடன் பழகத் தொடங்கினார். சக்திவேலுக்கு திருமணமாகிய நிலையில் இளம்பெண் பூமிகாவுடனான கள்ளக்காதலில் சுமனுக்கும், சக்திவேலுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.
இது தொடர்பாக கடந்த 9-ஆம் தேதி சுமன், சக்திவேல் தரப்பினர் சந்தித்து
சமதானம் பேசினர். அப்போது ஏற்பட்ட மோதலில் சுமன் தரப்பினர் சக்திவேலை கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுமன் உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் விசாரணை சக்திவேலின் கொலை சம்பவத்தை தொடர்ந்து இளம்பெண் பதற்றத்துடன் காணப்பட்டுள்ளார். மேலும் ,தனது தாய் வீட்டுக்கும் அவர் செல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேறு வழியின்றி உயிரை மாய்த்துக்
கொள்ள முடிவு எடுத்த அவர், விஷத்தை அருந்தி பேருந்து ஏறி விழுப்புரத்துக்கு சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை
நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் மேலும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
-ம.பவித்ரா








