86 கட்சிகளின் பதிவை ரத்து செய்த தேர்தல் ஆணையம்

அங்கீகரிக்கப்படாத 86 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசியல் கட்சிகளை நேரில் சென்று பதிவு செய்யப்பட்ட முகவரி உள்ளிட்ட தகவல்களை…

அங்கீகரிக்கப்படாத 86 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசியல் கட்சிகளை நேரில் சென்று பதிவு செய்யப்பட்ட முகவரி உள்ளிட்ட தகவல்களை சரிபார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டபோது குறிப்பிட்ட முகவரியில் சில அரசியல் கட்சிகள் செயல்படாதது தெரியவந்ததன் அடிப்படையில் 86 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பீகார், டெல்லி, கர்நாடகா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையில், அங்கீகரிக்கப்படாத 253 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த 253 கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திலிருந்து வழங்கப்பட்ட நோட்டீசுக்கு பதிலளிக்காததால், ஒரு மாநிலத்தின் பொதுச் சபை அல்லது 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாததால், செயலற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 கட்சிகள், உத்தரபிரதேசத்தை சேர்நத் 34 கட்சிகள், டெல்லி 33, தெலங்கானா 9, கர்நாடகாவை சேர்ந்த 6 கட்சிகள் அடங்கும்.

30 நாட்களுக்குள் அனைத்து வகை ஆதாரங்களையும் தேர்தல் ஆணைய விதிகளுக்குட்பட்ட தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும். அதில் திருப்தி ஏற்படும் பட்சத்தில் இந்த நடவடிக்கைகளில் இருந்து மீளலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.