ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு முயற்சி: 2 பேர் உயிரிழப்பு

குடும்பப் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அரளி விதையை அரைத்துக் குடித்து உயிரிழப்புக்கு முயன்ற நிலையில், அதில் 2 பேர் உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியை…

குடும்பப் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அரளி விதையை அரைத்துக் குடித்து உயிரிழப்புக்கு முயன்ற நிலையில், அதில் 2 பேர் உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் அமரர் ஊர்தி வாகனத்தை வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார். நந்தகுமாருக்கும், அவரது மனைவி சித்ராதேவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த சித்ராதேவி, அரளி விதையை அரைத்து தானும் குடித்துவிட்டு, 2 மகள்கள் மற்றும் மகனுக்கும் அதனை கொடுத்துள்ளார்.

4 பேரும் மயங்கி விழுந்துகிடந்தனர். இதுபற்றி தகவல் தெரிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், சிகிச்சை பலனின்றி மகன் விக்னேஷ்வரன், மகள் திவ்யா ஆகியோர் உயிரிழந்தனர்.

தாய் சித்ராதேவியும், மற்றொரு மகளான தனலெட்சுமியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சமபவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.