முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

மதுரை தலைமை தபால் நிலைய வளாகத்தில் செயல்படும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், சிம்மக்கல் பகுதியில், தபால்துறை சார்பில் ஏடிஎம் சேவை செயல்பட்டு
வருகிறது. இந்நிலையில், ஏடிஎம் சேவை மையத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் ஏடிஎம்
இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இயந்திரத்தை உடைக்க முடியாததால் திரும்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள், ஏடிஎம் இயந்திரம் சேதமடைந் திருப்பதாக காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திலகர் திடல் காவல் போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின் றனர்.

எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மதுரை மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, தபால் நிலைய ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி அரங்கேறிய சம்பவம் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Advertisement:
SHARE

Related posts

நிவாரண நிதி டோக்கன் முறையில் எந்த பிரச்னையும் இல்லை : அமைச்சர் ஐ.பெரியசாமி

Halley karthi

திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவு!

Halley karthi

அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு நன்றி: விஜய் வசந்த் ட்வீட்!

Halley karthi