திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீ ரென தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார்.
திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சித்தாநத்தம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. கார் முற்றிலும் எரிந்த நிலையில், அதில் இருந்த ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஓட்டுநரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தீப்பிடித்து எரிந்தது வாடகை டாக்சி என்பதும், உடல் கருகி உயிரிழந்த ஓட்டுநர் திருச்சி தென்னூர் மூலைக்கொள்ளைத் தெருவைச் சேர்ந்த நாராயணன் என்பதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.