முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

’அதுக்கு ஜாக்கி சான் மன்னிப்புக் கேட்டார்’: ஷாருக்கை அப்படி விமர்சிக்கும் கங்கனா

’போதைப் பொருள் வழக்கில் மகன் கைது செய்யப்பட்டபோது ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் மன்னிப்புக் கேட்டார்’ என்று கூறியுள்ள நடிகை கங்கனா, நடிகர் ஷாருக் கானை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதைப் பொருட்களை பயன்படுத்தி பார்ட்டி நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து , கடந்த 3 ஆம் தேதி அந்த கப்பலில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்த, தடை செய்யப்பட்ட போதைப் பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், வழக்கமாக சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை கிளப்பும் நடிகை கங்கனா ரணாவத், இப்போது இந்த பிரச்னையை வைத்தும் இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், தனது மகன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டபோது பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். மகனின் செயலுக்கு நான் வெட்கப்படுகிறேன். இது எனது தோல்வி. இந்த விவகாரத்தில் அவரை பாதுக்காக்கும் செயலில் ஈடுபடமாட்டேன் என்று கூறியிருந்தார் என்பதை பதிவு செய்துள்ளார்.
#justsaying என்ற ஹேஷ்டேக்கில் இதை அவர் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் ஷாருக்கானை பெயர் குறிப்பிடாமல் நடிகை கங்கனா விமர்சித்துள்ளார். கங்கனாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாடு மலர்ந்த நாள்: கடந்து வந்த பாதை

Vandhana

“எஸ்சி, எஸ்டியினருக்கான இட ஒதுக்கீடு பாஜக ஆட்சியில் புறக்கணிப்பு!” – திருமாவளவன் எம்.பி!

Halley karthi

இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வி

Vandhana