ஜெய் பீம் திரைப்படம் அரசியலாக்கப்படுவது துரதிஷ்டவசமானது என திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் ‘தேள்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பாடியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குநர் ஹரிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஞானவேல்ராஜா, சில திரைப்படங்கள் திட்டமிட்டு எடுக்கப்படுவது போன்று ஜெய் பீம் திரைப்படம் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
ஜெய் பீம் திரைப்படம் புனிதமான நோக்கத்தில் எடுக்கப்பட்டதாகவும், தற்போது அந்த படம் அரசியலாக்கப்படுவது ஒரு துரதிஷ்டவசமானது என்றும் அவர் கூறினார்.







