ஆத்மநாதர்சுவாமி கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா – தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆத்மநாதர்சுவாமி திருக்கோயிலில், ஆனி திருமஞ்சன தேரோட்ட திருவிழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோயிலில், ஆத்மநாதர்சுவாமி திருக்கோயில்…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆத்மநாதர்சுவாமி திருக்கோயிலில், ஆனி திருமஞ்சன தேரோட்ட திருவிழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு
சொந்தமான ஆவுடையார்கோயிலில், ஆத்மநாதர்சுவாமி திருக்கோயில் ஆனி
திருமஞ்சன திருவிழா, கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினசரி காலை மற்றும் மாலை ஆத்மநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும்,
மாணிக்கவாசகர் திருவீதி உலாவும் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, மாணிக்கவாசகர் அலங்கரிக்கப்பட்ட
திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நான்கு ரத வீதிகளிலும்
வலம் வந்த மாணிக்கவாசகர் திருத்தேரை, ஆவுடையார் கோயில் மற்றும்
சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ‘ஆத்மநாதா மாணிக்கவாசகா’
என்று பக்தி முழக்கமிட்டும், சிவனடியார்கள் தேவாரம் திருவாசகப் பாடல்களை
பாடியும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.