முக்கியச் செய்திகள் தமிழகம்

பழங்குடியின பெண்கள் நடத்தும் முதல் பெட்ரோல் பங்க்

தமிழ்நாட்டிலேயே பழங்குடி பெண்கள் நடத்தும் முதல் பெட்ரோல் நிலையம் உதகையில் திறக்கப்பட்டுள்ளது. 

இயற்கை எழில் கொஞ்சும் பேரழகு நிறைந்த பகுதிகளில் ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை. அழிவின் விளிம்பில் இருக்கும் தோடர், இருளர், கோத்தர், குரும்பர் உள்ளிட்ட  6 பழங்குடி சமூக மக்கள் இம்மாவட்டத்தில் வசிக்கின்றனர். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, நீலகிரி மாவட்டத்தில் சுமார் ஏழரை லட்சம் பழங்குடி மக்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டது. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத இம்மக்கள் மறந்திடாத பாரம்பரியங்களில் ஒன்று நடனம்.


இம்மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த பாலாடா பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் முனைப்பு காட்டியது. இதன் ஒருபகுதியாக, மத்திய பழங்குடியின நல அமைச்சகம் மற்றும் மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்,  தமிழகத்திலேயே பழங்குடி பெண்கள் மட்டுமே நடத்தும் பெட்ரோல் நிலையத் திட்டம் தொடங்கப்பட்டது. 


ஒரு சமூகத்துக்கு 2 பெண்கள் வீதம், 12 பெண்கள் ஷிஃப்ட் முறையில் பணியாற்றுகின்றனர். மாதந்தோறும் 8,500 ரூபாய் ஊதியத்துடன், 3 சதவீத அகவிலைப்படியும், ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதி பெண்களுக்கு தங்குவதற்கு இடவசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. 


ஊரடங்கு காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமானம் இன்றி தவித்ததாக கூறும் பழங்குடி சமூக பெண்கள், பெட்ரோல் நிலைய பணி, வருமானத்துக்கு பெரிதும் உதவுவதாக கூறுகின்றனர் பழங்குடி பெண்கள்.இனி, இவர்களும் முன்னேற்றப் பாதையில் நடைபோடுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Advertisement:
SHARE

Related posts

ஆகஸ்ட் 1-க்குப் பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: பொன்முடி

Vandhana

“அதிமுக இணைப்பு பற்றி டிடிவி.தினகரன் பேசுவது விநோதமானது”; அமைச்சர் ஓஎஸ்.மணியன்!

Jayapriya

’முடியல.. எனக்கும் கொஞ்சம் கொடு’ பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்குகள்!

Ezhilarasan