எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது

சென்னையில் எஸ்.பி.ஐ ஏடிஎம்-களில் நூதன முறையில் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும், எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து, நூதன முறையில் பல லட்சம்…

சென்னையில் எஸ்.பி.ஐ ஏடிஎம்-களில் நூதன முறையில் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும், எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து, நூதன முறையில் பல லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏடிஎம் எந்திரங்களின் தொழில்நுட்பத்தை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அரியானா மாநிலத்தை சேர்ந்த 10 கொள்ளையர்கள், நூதன திருட்டில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபர் அமீர் அர்ஸ் என்பவரை, கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடம் இருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அரியானா சென்ற தனிப்படை போலீசார், வீரேந்தர் என்ற மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க, போலீசார் ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.