முக்கியச் செய்திகள் தமிழகம்

தடுப்பூசி தட்டுப்பாடு: 2-ம் தவணை போடவேண்டியவர்கள் கலக்கம்!

கன்னியாகுமரியில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவடத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் தினசரி கொரோனா தொற்று எற்பட்டவர்களின் எண்ணிக்கை 200ஐ நெருங்கி வருககிறது.

இதனால் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடபட்டு வருகிறது. இதில் தடுப்பூசி செலுத்துக் கொள்ள மக்கள் அதிகம் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

அதற்காக ஆச்சரிபள்ளம் அரசு மருத்துவமனைகளில் 9 தடுப்பூசி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 47 மையங்கள், மினி கிளினிக்குகளில் 41 மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் 42 மையங்கள் என மாவட்டம் முழுவதும் 140 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தன. தற்போது போதிய தடுப்பூசிகள் அரசு தரப்பில் இருப்பு இல்லாததால் தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுபட்டு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நான்கு நாட்களாக இந்த தட்டுபாடு நிலவி வருவதால் தடுப்பூசி போட வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 140 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் அரசு மருத்துவமனை, ஆரம்ப மற்றும் நகர்புர சுகாதர மையங்களில் தடுப்பூசி நிறுத்தபட்டும் சில மையங்கள் மூடபட்டும் உள்ளதால் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முதல் தவணை தடுப்பூசி போட்ட 28 நாட்களில் இரண்டாம் தவணை போட வேண்டியவர்கள் தடுப்பூசி போட முடியாமல் கலக்கமடைந்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெறுவேன் – குஷ்பு நம்பிக்கை!

Gayathri Venkatesan

முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாக 4 வது மனைவி புகார்: முன்னாள் அமைச்சர் கைது

Gayathri Venkatesan

ஜனநாயகக் கடமையாற்றிய கமல்!

Halley karthi