முக்கியச் செய்திகள் இந்தியா

ஒரே நாளில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால், புதிதாக 2 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 26,20,03,415 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாராத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் நோய்த்தொற்றால் 1,038 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிகை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதித்த முதல் மூன்று நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இந்தியாவும் பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடித்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா பரவல்: மூன்று மாநிலங்களில் மத்திய குழு ஆய்வு!

விக்னேஷ் சிவனை காதலிக்க காரணம் என்ன? மனம் திறந்தார் நயன்தாரா

Gayathri Venkatesan

மதுரையில் தெற்கு தொகுதியில் திருநங்கை பாரதி கண்ணம்மா போட்டி!

Ezhilarasan