மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை

ஆண்டிபட்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் (27). இவர் குள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், பிரபு…

ஆண்டிபட்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் (27). இவர் குள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், பிரபு ஆகியோருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு அணைக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் நவீன் அவரது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரபு, செல்வம் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் நவீனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற நவீன் நண்பர்கள் ராஜா மற்றும் ஜெகதீஸ் ஆகிய இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிரபு, செல்வம், நேசமணி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் இக்கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை தேடி வருகின்றனர். குடிபோதையில் தகராறு நடந்ததால் ஏற்பட்ட இக்கொலை சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply