ஆசிய விளையாட்டு: பெண்கள் துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவில் இந்திய வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

2026-ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் உள்ள நகோயா மாகானத்தில் நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டி தொடங்கிய நாள் முதல் தினந்தோரும் இந்தியா பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை குவித்து வருகிறது. அதன்படி இந்தியா இதுவரை 4 தங்கப்பதக்கங்கள் உட்பட 45-க்கும் மேற்ப்பட்ட பதக்கங்களை வென்றுள்ளது.

இந்த நிலையில், பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவில் இந்தியாவின் நீரு, ஆஷிமா அஹலாவத் மற்றும் மனிஷா கீர் கூட்டணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
346 புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற சீனா தங்கப் பதக்கத்தையும், 328 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் இடித்த இந்தியா வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றின. அதேபோல் 325 புள்ளிகளுடன் குவைத்மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றது.

இத்துடன் இந்தியா 46 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.