GOLD RATE | தங்கம் விலை மீண்டும் சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் வாரத்தின் முதல்நாளான நேற்று தங்கத்தின் விலை அதிரடியாக இரண்டு முறை குறைந்தது. அதன்படி சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 13 ஆயிரத்து 665 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூ.1,09,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிலோ ரூ. 2,45,000-க்கும் ஒரு கிராம் ரூ. 245-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.13,640-க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போன்று வெள்ளி விலையும் குறைந்து காணப்படுகிறது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.240-க்கும், கிலோவுக்கு ரூ.5000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.