தூத்துக்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின், நெல்லையை சேர்ந்த மாற்று சமூகத்தை சார்ந்த பெண்ணை காதலித்ததால், அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித் உள்ளிட்டோரால் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கவினை கொலை செய்த சுர்ஜித், அவரது தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி உள்ளிட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், தங்கள் மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி, ஜெயபால் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், “சுர்ஜித் பெற்றோரான சரவணன், கிருஷ்ணகுமாரி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்தும், ஜெயபால் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
நெல்லைல் கடந்த 20 கவின் ஆணவப் படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் பெற்றோர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து மதுரை அமர்வு உத்தரவு
குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கோரி ஜெயபால் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து மதுரை அமர்வு உத்தரவு




