தீபாவளி முடிந்து சென்னை திரும்பிய பொதுமக்கள்! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரிப்பு!

தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறை முடிந்ததால், மீண்டும் சென்னை நோக்கி பொதுமக்கள்  படையெடுத்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பொது மக்கள்  சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.  இந்த நிலையில்,  தீபாவளி விடுமுறை…

தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறை முடிந்ததால், மீண்டும் சென்னை நோக்கி பொதுமக்கள்  படையெடுத்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பொது மக்கள்  சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.  இந்த நிலையில்,  தீபாவளி விடுமுறை முடிந்ததையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கினர்.

தீபாவளிக்காக சென்னையில் இருந்து சுமார் 12 லட்சம் மக்கள் தங்களது சொந்த
ஊர்களுக்கு சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதை தொடர்ந்து, விடுமுறை அனைத்தும் முடிந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்ற சென்னை நோக்கி திரும்ப தொடங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.  தமிழ்நாடு மட்டுமல்லாமல் அருகில் உள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும் விடுமுறைக்காக சென்ற வெளி மாநிலத்தவர்கள் சென்னை நோக்கி  வரத் தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த அனைத்து ரயில்களும் நிரம்பி வழிந்தன. மேலும், ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. 

            

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.