மயிலாடுதுறையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால், அதிகபட்சமாக 84 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்று மாலை துவங்கி தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறையில் 84 மில்லி மீட்டர் மழையும், செம்பனார்கோயிலில் 56 மில்லி மீட்டர் மழையும், சீர்காழியில் 73 மில்லி மீட்டர் மழையும், கொள்ளிடத்தில் 64 மில்லி மீட்டர் மழையும், பொறையாரில் 77 மில்லி மீட்டர் மழையும் காலை 6 மணி நிலவரப்படி பதிவாகின.
இந்நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 90% வறண்டு கிடந்த குளங்கள் ஏரிகள் முழுமையாக நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபி.காமராஜ்







