புதுடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் – வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுடெல்லி  சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2013 முதல் புதுடெல்லி தொகுதியில் எம்எல்ஏ கெஜ்ரிவால் இந்த முறை அதே தொகுதியில் போட்டியிடவுள்ளார். இவருக்கு எதிராக பாஜகவின் பர்வேஷ் வர்மா மற்றும் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் ஆகியோருக்கு போட்டியிடுகிறார்.

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பின்னர் பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி ஏற்கனவே 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 59 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.