“குறள் வழி நடப்போம்! சமத்துவ சமுதாயம் பேணுவோம்” – முதலமைச்சர் #MKStalin பதிவு

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, குறள் வழி நடப்போம் சமத்துவ சமுதாயம் பேணுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாவது நாள், மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று (ஜன.15) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையும் படியுங்கள் : #YezhuKadalYezhuMalai படத்தின் டிரெய்லர் எப்போது?

தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன் மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோரும் திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உலகத்தார் அனைவருக்கும் பொதுநெறி வழங்கிய தமிழ்ப் பேரறிவின் அடையாளம் அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம்! குறள் வழி நடப்போம்! சமத்துவ சமுதாயம் பேணுவோம்!” என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.