சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்பு போடும் நிகழ்ச்சி – திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வேடுபறி அலங்காரத்தில் அம்மன் அம்பு போடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் நவராத்திரி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.  நவராத்திரி திருவிழாவில்…

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வேடுபறி அலங்காரத்தில் அம்மன் அம்பு போடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் நவராத்திரி திருவிழா கடந்த 15-ந் தேதி
தொடங்கியது.  நவராத்திரி திருவிழாவில் கடைசி நாளான நேற்று அம்மன்
வேடுப்பறி அலங்காரத்தில் வெள்ளி குதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு
அருள்பலித்தார்.

மிகவும் பிரசித்தி பெற்ற  சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15 ந்தேதி தொடங்கியது.

இதையும் படியுங்கள்: விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் மின்வெட்டை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

இதில் புரட்டாசி மாதம் அமாவாசை மற்றும் மறுதினம் பிரதமை முதல் நவமி வரை தேவி
பாகவதம், அக்னி பாகவதம், அக்னி புராணம், தேவி மகாமித்யம் ஆகிய புராணக்
கூற்றுகளின் படி அதர்மமான மகிஷாசுரனை அழிக்க ஊசிமுனையில் துர்க்கை,
மகாலட்சுமி,  சரஸ்வதி என முறையே முதல், நடு,கடை என 9 நாட்கள் கடும் தவம்
புரிந்து 10 வது நாள் விஜயதசமி விழாவில் முக்கிய நிகழ்வான அம்மன்
அம்பு போடும் நிகழ்ச்சி நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு வேடுபறி அலங்காரத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடாகி வன்னிமரம் சென்றடைந்து அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மேலும் அனுதினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி என பக்தி முழங்க அம்மனை தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.