நயினார் நாகேந்திரன் கைது: டிடிவி தினகரன் கண்டனம்!

நெல்லையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் கைது!

நெல்லையிலிருந்து திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார். முன்னதாக நெல்லையில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் தச்சநல்லூர் சோதனை சாவடியில் நெல்லை மாநகர போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.

டிடிவி தினகரன் கண்டனம்!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கும் காவல்துறையின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரை, தவெக அரசும் அதன் காவல்துறையும் தீவிரவாதிகளைத் துரத்திச் செல்வதைப் போல அவரது வாகனத்தைப் பின்தொடர்ந்து, வழிமறித்துத் தடுத்து நிறுத்தி கைது செய்திருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாண்புமிகு உயர்நீதிமன்றம் தவெக அரசின் பொய் பித்தலாட்டங்களை இன்று தோலுரித்துக் காட்டியுள்ள நிலையில், அதனைத் திசைதிருப்பும் நோக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிடுவதோடு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையை, அதிகார வர்க்கத்தின் ஏவல் கருவியாகப் பயன்படுத்துவதைத் தவெக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.