திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற நயினார் நாகேந்திரன் கைது!

திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அவரது ஆதரவாளர்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், கார்த்திகை திருநாளான இன்று (நவ. 24) ஒருநாள் மட்டும் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனிடையே, உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்தச் சீராய்வு மனு மீது விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை.

மதுரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு!

இதனிடையே, மதுரை மாவட்டம் முழுவதும் BNSS 163 விதியின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, மதுரை மாவட்டம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற நயினார் நாகேந்திரன் கைது!

இதற்கிடையே, திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை போலீசார் வீட்டுக்காவலில் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நெல்லையிலிருந்து திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக நெல்லையில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் தச்சநல்லூர் சோதனை சாவடியில் நெல்லை மாநகர போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது குறித்து நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“இன்றைய தினம், திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் முருகப் பெருமானை தரிசிப்பதற்காகவும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படுவதைக் கண்ணாரக் காண்பதற்காகவும் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டுச் சென்றோம்.

ஆனால், இந்த ஜனநாயக நாட்டில், நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, அதன்படி நடைபெறும் நிகழ்வைக் காணச் சென்ற எங்களை, இந்த ஜனநாயக நாட்டில், நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, அதன்படி நடைபெறும் நிகழ்வைக் காணச் சென்ற எங்களை, இந்து மக்கள் விரோத தமிழக வெற்றிக் கழக அரசின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதும், மக்களின் வழிபாட்டு உரிமையைப் பாதுகாப்பதும் ஓர் அரசின் கடமை. ஜனநாயக நாட்டில் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வது எந்த வகையில் நியாயம்?” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.