’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?’ கமல்ஹாசன் கேள்வி!

மகன் பேரறிவாளனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் அற்புதம் அம்மாள் தட்டி விட்டார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட…

மகன் பேரறிவாளனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் அற்புதம் அம்மாள் தட்டி விட்டார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் சிறையில் அடைக்கப்பட்டு 30 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், தன் மகனை வெளியே கொண்டு வர பெரும் போராட்டமே நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருடைய போராட்டம் குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?

இவ்வாறு கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.