குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் சிலர் இரண்டு ஆமைகளை விட்டுச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் விட்டிருந்த இரு ஆமைகள் குறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகாரின் அடிப்படையில் ஆமைகளை மீட்ட போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை பகுதியில் குடிசை
மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியில் சில சமூக விரோதிகள் உயிருடன் உள்ள ஆமைகளை விட்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் அசுத்தமாகியுள்ளதாக கூறி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நேருவுக்கு தகவல்
அளித்தனர்.
இதனையும் படியுங்கள்: தனியார் பேருந்து விவகாரம்: அரசின் சலுகைகள் எந்தவிதத்திலும் நிறுத்தப்படாது என அமைச்சர் சிவசங்கர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
இதையடுத்து இன்று காவல்துறையினருடன் சட்டமன்ற உறுப்பினர் நேரு அந்த
அடுக்குமாடி குடியிருப்பின் மேலே சென்று பார்த்தார். அப்போது பிளாஸ்டிக்
குடிநீர் தொட்டியில் உயிருடன் இருந்த இரு ஆமைகளையும் பத்திரமாக மீட்ட போலீசார்
அதனை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் குடிநீர் தொட்டியில் ஆமைகளை
விட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சட்டமன்ற உறுப்பினர் நேரு அளித்த
புகாரின் அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
– யாழன்







