அண்ணாமலை தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் – நாராயணசாமி குற்றச்சாட்டு

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர்…

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வதந்தியை பரப்பும் கட்சியாக பாஜக செயல்படுகிறது. சமூக வலை தளங்களில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க பொய் பரப்புரை செய்கிறது மேலும் இது பொய்ப்பரப்புரை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை அம்மாநில முதலமைச்சர் உறுதி செய்துள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளித்துள்ளது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.  பொறுப்புள்ள கட்சித்தலைவர் பேசியுள்ளது வேதனையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அண்ணாமலை அரைவேக்காடு அரசியல்வாதி என்பது உறுதியாகியுள்ளது. பாஜக கட்சி பொய் புரட்டை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. பொய்யை மூலதனமாக கொண்டு செயல்படும் பாஜகவிற்கு தமிழக புதுச்சேரி மக்கள் சவுக்கடி கொடுப்பார்கள்.

ஆளுநர் மாளிகையில் மக்கள் குறைகேட்பு கூட்டத்தை நடத்துகின்றனர். ஆனால், இன்னும் ஆளுநர்களும் துணைநிலை ஆளுநர்களும் திருந்தவில்லை. அமைச்சரவை எடுக்கும் முடிவில் ஆளுநர்கள் தலையிடவோ தடைபோடவோ கூடாது என உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானாவில் ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தரராஜன் அங்கு மக்கள் குறைகேட்பு கூட்டத்தை நடத்த முடியுமா என சவால் விட்டேன், அதற்கு பதில் இல்லை.

அண்மைச் செய்தி : தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை – சிராக் பஸ்வான்

ஆனால் தெம்பு திரானி இல்லாத புதுச்சேரி ஆட்சியில்தான் துணைநிலை ஆளுநர்கள் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்த முடியும் தனது அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுகின்றார் என்று பார்க்காமல் முதலமைச்சர் நாற்காலி மட்டும் போதும் என்பதற்காக அதிகாரத்தை விட்டுக்கொடுத்து டம்மி முதல்வராக ரங்கசாமி செயல்படுகிறார். இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.