பீகார் மாநில தொழிலாளர்கள் குறித்து தமிழக முதலமைச்சரிடம் பேச முயற்சி செய்ததாகவும் ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை எனவும் பீகார் மாநில லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசிய பிறகு லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பீகார் மக்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து விசாரணை நடத்த ஆளுநரிடம் கோரிக்கை வைத்ததாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பீகார் மக்களின் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பீகார் மக்களின் பங்கும் பங்களிப்பும் அதிகமானது எனவும் கூறினார். பீகாருருக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நல்லுறவு இருப்பதாகவும் அனைவரும் பாதுகாப்பான சூழலில் வாழும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிராக் பஸ்வான் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் வீடியோ பரப்பிய சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அண்மைச் செய்தி : வடமாநில தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்
தமிழக முதலமைச்சரை இந்த பிரச்சனை தொடர்பாக சந்தித்து பேசுவதற்கு என்னால் முடிந்த அளவு முயற்சி செய்ததாகவும் ஆனால் நேரம் கிடைக்கப் படவில்லை எனவும் அவர் கூறினார். முதலமைச்சரின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவுக்கு எங்கள் மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு சந்தித்து பேச நேரம் ஒதுக்கியதாகவும் ஆனால் மக்கள் பிரச்சனை தொடர்பாக சந்தித்து பேச நேரம் கேட்ட எனக்கு ஒதுக்கப்படவில்லை எனவும் சிராக் பஸ்வான் கூறினார்.