தமிழகம் செய்திகள்

கடையை அகற்ற கூறிய அதிகாரிகள்; போராட்டம் நடத்திய வியாபாரி

போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதாக கூறி பேரூராட்சி நிர்வாகம் கடையை அகற்ற சொன்னதால் கோபமடைந்த வியாபாரி பொருட்களை வெளியில் கொட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயமுத்தூர் மாவட்டம் அன்னூர் உப்புத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அக்தர்(51). இவர் அன்னூர் பேருந்து நிலையத்தின் முன்பாக சாலையோர கடையை வைத்து துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது கடையானது போக்குவரத்துக்கு இடயூறாக இருப்பதாக கூறி கடையை உடனே அகற்ற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கூறபட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அக்தார் தன்னுடைய கடையில் இருந்த துணிகள், கட்டில் மற்றும் இதர பொருட்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அன்னூர் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அக்தரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து அக்தர் கூறுகையில், இப்பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக இருப்பின் தன்னுடைய கடையை மட்டும் அகற்றாமல் அனைத்து கடையையும் அகற்ற வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து அவர் சாலையில் வீசிய பொருட்களை கடையின் உள்ளே எடுத்து வைத்துவிட்டு அவரை விசாரிப்பதற்காக போலீசார் காவல் நிலையம் அழைத்துச்
சென்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் அன்னூர் சாலையில் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  • வேந்தன்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போலி நேர்முகத்தேர்வுகள் நடத்தி மோசடி – 8 பேர் கைது

G SaravanaKumar

திருப்பூரில் ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது; பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Jayasheeba

மேற்கு வங்கத்தில் வாகனங்களை துவம்சம் செய்த யானை – தெறித்து ஓடிய மக்கள்!

Web Editor