இனி திராவிட மாடல் கிடையாது: அன்புமணி

தமிழ்நாட்டில் பாட்டாளி மாடலை உருவாக்குவேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சென்னை திருமுல்லைவாயிலில் இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய பாமக இளைஞரணித்…

தமிழ்நாட்டில் பாட்டாளி மாடலை உருவாக்குவேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சென்னை திருமுல்லைவாயிலில் இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, “தமிழ் நாட்டைக் காப்பாற்றுவதற்கு பிறந்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. இனி திராவிட மாடல் கிடையாது, பாட்டாளி மாடல் தான். அதை நான் உருவாக்குவேன். தொலைநோக்கு சிந்தனை திராவிட கட்சியில் கிடையாது, நாம் உருவாக்கும்” என்று கூறினார்.’

மேலும், “உறுதியாக 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை பெற்றுத்தருவோம். இது காலத்தின் கட்டாயம். என் தம்பிகள் எங்கு சென்றாலும் போராட்டம் நடத்த வேண்டுமென்று கேட்கிறார்கள். நான் மிகவும் அமைதியாக இருக்கும்படி சொல்லி கொண்டுவருகிறேன். அதற்கு அவசியம் இருக்காது என நான் நம்புகிறேன் .அப்படி இல்லையென்றால் வேறு மாதிரி ஆகிவிடும்” என்று குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்யவேண்டும் எனவும், குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு மேலும் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் அரிசி,பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகளும் விலை ஏற்றி இருக்கிறார்கள், இதை மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து குறைக்க வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.