கூகுள் சாட்களில் விரைவில் எச்சரிக்கை பேனர்கள்!

ஹேக்கர்கள் மற்றும் போலியான லிங்க்குகளை குருந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பி, பயணர்களின் தகவல்களைச் சேகரிப்பது (ஃபிஷிங் அட்டாக் ) போன்ற தாக்குதல்களில் இருந்து பயனர்களைப் பாதுகாக்க, கூகுள் தனது சாட் செயலியில் எச்சரிக்கை…

ஹேக்கர்கள் மற்றும் போலியான லிங்க்குகளை குருந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பி, பயணர்களின் தகவல்களைச் சேகரிப்பது (ஃபிஷிங் அட்டாக் ) போன்ற தாக்குதல்களில் இருந்து பயனர்களைப் பாதுகாக்க, கூகுள் தனது சாட் செயலியில் எச்சரிக்கை பேனர்களை காண்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் கூகுள் சாட்டில், தனிப்பட்ட கூகுள் கணக்குகளைக் கொண்ட பயனர்களிடமிருந்து வரும் சாத்தியமான போலி குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் செய்திகளுக்கு எதிராக எச்சரிக்கும் அறிவிப்புகள் இனி காட்சிப்படுத்தப்படும் என்று கூகுள் அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயனர்களைத் தீங்கிழைக்கும் செயல்களில் இருந்து பாதுகாக்கவும், தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், இந்த எச்சரிக்கை பதாகைகள், ஏற்கனவே ஜிமெயில் மற்றும் கூகுள் டிரைவ் செயலியில் இடம்பெற்று உதவிகரமாக இருக்கின்றன. சமீபத்தில் கூகுள் தனது சாட் செயலியில் முகப்புகளை மாற்றியுள்ளது. மேலும் இந்த எச்சரிக்கை பேனர்கள் ஜிமெயிலில் இருந்து , உங்கள் நிறுவனத்திற்கு வெளியே அனுப்பப்படும் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்கும்போது காட்சிப்படுத்தப்படும் என்றும் நிர்வாகிகள் இந்த குறிப்பிட்ட எச்சரிக்கை பேனர்களை தங்கள் நிறுவனத்திற்காக ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலாம் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 இந்தப் புதிய அம்சம், அடுத்த இரண்டு வாரங்களில் வெளிவரவுள்ளது. அத்துடன் அனைத்து கூகுள் வாடிக்கையாளர்களுக்கும், தனிப்பட்ட கூகுள் கணக்குகளைக் கொண்ட பயனர்களுடன் பாரம்பரிய ஜி சூட் அடிப்படை மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கும் இந்த புதிய அம்சம் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தின் இரண்டாவது பீட்டாவை வெளியிட்டது. அதில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கான புதுப்பிப்புகளுடன் புதிய அம்சங்கள் மற்றும் பயனர் கட்டுப்பாடுகளை வழங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு 13 இல், பயனர்களுக்கு அறிவிப்புகளை அனுப்பும் முன் செயலிகள் பயனர்களின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அந்தக் கட்டுப்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

– சத்யா விஸ்வநாதன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.