சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம்
மருத்துவமனைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அனுப்பி வைத்தார்.
தருமபுரி மாவட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இரண்டு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டார். நேற்றும் இன்றும் பாமக நிர்வாகிகளின் இல்ல
சுப நகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் பல்வேறு இடங்களில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான இன்று அரூர் மற்றும் பாப்பிரெட்டிபட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றபொழுது, தருமபுரி – கிருஷ்ணகிரி தேசிய
நெடுஞ்சாயைில் குண்டல்பட்டி சந்திப்பு அருகே சாலை விபத்தில் இரு சக்கர வானத்தில் சென்ற மோகன், அருட்செல்வி ஆகியோர் விபத்துக்குள்ளானார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.







