திருப்பூரில் அரசு அலுவலகங்களில் மதசார்புடைய பண்டிகைகள் கொண்டாட தடை விதிக்க வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயச்
தசமியை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு அலுவலகங்களில் மதசார்புடைய பண்டிகைகள் மற்றும் மதசார்புடைய புகைப்படங்கள் வைக்கக்கூடாது என அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஆண்டுதோறும் மதச் சார்புடைய உருவப் படங்கள் வைத்து ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டு வருவதாகவும் , இது சிறுபான்மை மக்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் இந்த ஆண்டு மத சார்புடைய பண்டிகைகளை அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் கொண்ட தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.







