விவசாயியான எடப்பாடி பழனிசாமி, மீண்டும் தமிழக முதலமைச்சர் ஆக வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் சேவூர்.எஸ். இராமசந்திரனை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வன்னியர்களுக்கு 10.5சதவீத உள்இடஒதுக்கீடு பெற்று தந்தது சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனக் கூறினார்.
அதிமுக, பாமக கூட்டணி பக்கம் உழைக்கும் மக்கள், தொழிலாளர், பாட்டாளிகள் இருப்பதாக கூறிய அன்புமணி ராமதாஸ் திமுக கூட்டணி பக்கம் ஏசி அறையில் இருக்கும் முதலாளிகள்தான் இருப்பதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் மீண்டும் விவசாயியான எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக வரவேண்டும் என்றும் கூறி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.







