28.3 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

3வது முறையாக அதிமுக ஆட்சியை பிடிக்கும்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடர வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி அதிமுக கூட்டணி தமாகா வேட்பாளர் தர்மராஜை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே வாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பெற்று கொடுக்கும் வகையில் நட்பு பாலமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விளங்கி வருவதாக கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் பேசிய அவர், மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப நலத் திட்டங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருவதால், அதிமுக ஆட்சியே, தொடர்ந்து 3-வது முறையாக தொடர மக்கள் முடிவெடுத்து விட்டதாகவும் பரப்புரையில் ஜி.கே. வாசன் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, மகளிருக்கான அதிக திட்டங்களையும், மக்களின் குறைகளையும், கஷ்டங்களையும் குறைக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக தேர்தல் அறிக்கை உள்ளது எனவும் திமுகவிடம் இல்லாத நல்ல குணமும், மனமும் அதிமுகவிடம் உள்ளது எனவும் கூறினார். மேலும் அதிமுகவிற்கு வாக்களித்தால் வளர்ச்சி தரும்,வாழ்வு தரும் என பரப்புரையில் பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram