மாகராஷ்டிராவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரோ எச்சரித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.23 கோடியை கடந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 28 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் புதியதாக 47,827 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 24.67 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 3.67 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதன் காரணமாக கொரோனா பாதிப்பில் இம்மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இந்த சூழலில், தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தாக்ரே எச்சரித்துள்ளார். மேலும், புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. இம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 249 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக நாடு முழுவதுமான ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,63,396 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







