நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் மற்றும் லயன்ஸ் இன்டர் நேஷனல் சார்பில் திருநங்கைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு பல்வேறு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
நியூஸ்7 தமிழின் அன்பு பாலம் நிகழ்ச்சியின் வாயிலாக பல்வேறு அமைப்புகள்
இணைந்து எண்ணற்ற உதவிகளை, நலத்திட்டங்களை ஏழை எளிய மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு வழங்கி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும் : திருச்செந்தூர் மாசி திருவிழா; பக்தர்கள் காவடி ஏந்தி பாத யாத்திரை
அந்த வகையில் லயன்ஸ் இன்டர்நேஷனல் குழுமத்தின் மாவட்ட ஆளுநரின் சிறப்பு சேவை
திட்டமான விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 17 திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு ஆடுகள் மற்றும் தொழில் துவங்குவதற்கான நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாவட்ட தலைவர் வசந்தா ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.