திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் காவடிகள் ஏந்தியும் அலகு குத்தியும் பாத யாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில்
மாசி மாத திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து திருச்செந்தூரில் பத்து நாட்கள் கோலாகலமாக திருவிழா நடைபெறும். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து முருக பக்தர்கள் 41 நாட்கள்
விரதமிருந்து காவடி கட்டி நேர்த்தி கடன் செலுத்த பாத யாத்திரையாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும் : சங்கரன்கோவிலில் திராவிடர் கழக கூட்டத்திற்கு எதிர்ப்பு; இந்து அமைப்பினர் கைது
அந்த வகையில் குளச்சல், மார்த்தாண்டம் இரணியல், தக்கலை, மங்காரம், புதுக்கடை,
தலக்குளம், மேற்குநெய்யூர், திக்கணங்கோடு உள்பட 50 க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் புஷ்பகாவடி, கதிர்வேல் காவடி, சூரிய காவடி, சூரிய காவடி, அக்னி காவடி, தேர்காவடி, என காவடிகளை ஏந்தியும் அலகு குத்தியும், திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோயில் வந்து அங்கிருந்து ஒன்றன்பின் ஒன்றாக திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக சென்றனர்.இந்த காவடி பவனியை காண சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். 200-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.