முக்கியச் செய்திகள் தமிழகம்

தாம்பரத்தில் நின்ற தேஜஸ்; மத்திய அமைச்சர் எல்.முருகன், டி.ஆர்.பாலு எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

தாம்பரம் ரயில்நிலையத்தில் இன்று முதல் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் என மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து தேஜஸ் ரயிலை மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் கொடியை அசைத்து துவக்கி வைத்தனர்.

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு கடந்த 2019ம் ஆண்டு தேஜஸ் அதிவிரைவு ரயில் தொடங்கப்பட்டது. இந்த ரயிலானது சென்னை புறநகர் வழியாகச் சென்று திருச்சி சந்திப்பில் மட்டுமே நின்று செல்லும். ஆனால் பயணிகள் தாம்பரம் சந்திப்பில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மத்திய ரயில்வே துறைக்கு கடிதம் எழுதி இருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பயணிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் தேஜஸ் அதிவிரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நிகராக கருதப்படுவது தாம்பரம் ரயில் நிலையம். இங்கிருந்து அதிகளவில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் மிகவும் அதிகமாக உள்ளனர். இன்று முதல் தேஜஸ் அதிவிரைவு ரயில் இன்று முதல் நின்று செல்லும் தெரிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியாகவே கருதுகின்றனர்.முதல் நாளான இன்று மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத்துறையினை இணை அமைச்சர் எல்.முருகன், டி.ஆர்.பாலு, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த தேஜஸ் அதிவிரைவு ரயில் சென்னை புறநகர் வழியாக திருச்சி சந்திப்புக்கு 10.15 மணி அளவில் மதுரைக்கு 12.15 மணியளவில் சென்றடைகிறது. மாலை 3 மணி அளவில் மதுரையில் இருந்து புறப்படும் தேஜஸ் அதிவிரைவு ரயில் சரியாக இரவு 9 .15 மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைகிறது. வாரத்தில் சுழற்சி முறையாக ஆறு நாட்கள் மட்டுமே தேஜஸ்  ரயில் இயக்கபடுகிறது. வியாழக்கிழமை அன்று மட்டும் இயங்காது என தென்னக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை

Halley Karthik

‘சோதனைகளுக்கும் முடிவு கட்டியிருக்கிறோம்’ – முதலமைச்சர்

Arivazhagan Chinnasamy

திமுகவிற்கு நடிகை விந்தியா சவால்!

Jeba Arul Robinson