கராச்சி விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவரை துன்புறுத்தியதற்காக பாகிஸ்தான் குடியேற்ற அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இளம் பெண் ஒருவர் பஹ்ரனில் இருந்து கராச்சி விமான நிலையத்திற்கு தனியாக பயணம் செய்துள்ளார். விமான நிலையத்திற்கு வந்தடைந்த பின்னர், அங்கிருந்த அதிகாரி அப்பெண்ணிடம் செல்போன் எண்ணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் தனக்கு இனிப்புகள் வழங்க வேண்டும் என்று அதிகாரி கூறியுள்ளார். இதனை அங்கிருந்த பார்வையாளர்கள் படம்பிடித்துள்ளனர்.
தற்போது அந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்வத்திற்கு விளக்கமளிக்குமாறு அப்பெண்ணின் உறவினர்கள் கேள்விகள் எழுப்பினர். அதற்கு, குடிவரவு படிவத்தில் குறிப்பிடத்தான் செல்போன் எண்ணை கேட்டத்தாகவும், கிண்டலுக்காக இனிப்புகளை கேட்டத்தாகவும் அதிகாரி தெரிவித்தார். வீடியோ வைரலானதையடுத்து மத்திய புலனாய்வு அமைப்பு அவரை இடைநீக்கம் செய்துள்ளது.







