மதங்களை கடந்து சாதனை….சமஸ்கிருத தேர்வில் முதலிடம் பிடித்த முஸ்லிம் மாணவர்!

உத்திரப்பிரதேச மாநில சமஸ்கிருத வாரியத் தேர்வில் வாரணாசியை சேர்ந்த முஸ்லிம் மாணவர் இர்பான் முதலிடம் பிடித்துள்ளார். உத்திரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள சந்தௌலியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் இர்பான். இவர் கடந்த பிப்ரவரி- மார்ச்…

உத்திரப்பிரதேச மாநில சமஸ்கிருத வாரியத் தேர்வில் வாரணாசியை சேர்ந்த முஸ்லிம் மாணவர் இர்பான் முதலிடம் பிடித்துள்ளார்.

உத்திரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள சந்தௌலியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் இர்பான். இவர் கடந்த பிப்ரவரி- மார்ச் மாதம் நடந்த உத்தரப்பிரதேச மத்தியமிக் சமஸ்கிருத சிக்ஷா பரிஷத் வாரியத்தால் நடத்தப்பட்ட ”உத்தர் மத்யமா-II” (12ஆம் வகுப்பு) தேர்வில் பங்குபெற்று சாதனையும் செய்துள்ளார். வாரியத்தின் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் லக்னோவில் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில் 17 வயது சிறுவனான இர்பான் 82.71 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளார். இது அந்த மாவட்டத்தின் முதல் மதிப்பெண் ஆகும்.

சமஸ்கிருத ஆசிரியராக விரும்பும் இர்பான், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் 20 இடம் பெற்ற மாணவர்களில் ஒரே முஸ்லிம் ஆவார். இந்த தேர்வில் 13,738 மாணவர்களை பின்னுக்குத் தள்ளி இர்பான் முதலிடத்தை பிடித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.