வேலூரில் கொட்டித் தீர்த்த கனமழை – தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

வேலூரில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பெய்த கனமழையால் மக்கள் அவதிக்குள்ளாகினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு…

வேலூரில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பெய்த கனமழையால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந் நிலையில் வட மாவட்டமான வேலூரிலும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. எனவே மதியம் 3 மணி முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது.

வேலூர், சத்துவாச்சாரி, கொணவட்டம், உள்ளிட்ட மாநகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அணைக்கட்டு ஒடுகத்தூர்,பள்ளிகொண்டா, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு புற நகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.கனமழையால் கிரீன் சர்கிள் மற்றும் சத்துவாச்சாரி சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.