தமிழகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த அதிமுக -பாஜகவால்தான் முடியும்: அமித் ஷா

தமிழ்நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த அதிமுக- பாஜக கூட்டணியால்தான் முடியும், என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தில், அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

தமிழ்நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த அதிமுக- பாஜக கூட்டணியால்தான் முடியும், என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தில், அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பரப்புரை மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அவருக்கு, மலர் தூவி வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அப்போது பேசிய அமித்ஷா, தமிழ்நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த, அதிமுக பாஜக கூட்டணியால் தான் முடியும் என்றார். தமிழ்நாட்டின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு, பிரதமர் மோடி ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக அமித்ஷா கூறினார். மக்கள் வளர்ச்சியை ஏற்படுத்தும் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், ஊழல் கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

திருக்கோவிலூரில் அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் அமித்ஷா கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், திமுகவிற்கும் காங்கிரசுக்கும் மக்களை பற்றி கவலை இல்லை எனவும், பிரதமர் மோடி தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் அக்கறை கொண்டவர் என்றும் கூறினார். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வீடு கட்டிக் கொடுத்ததாகவும் அமித்ஷா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.