பெண்களை இழிவாக பேசும் திமுகவினருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
திருக்கோவிலூரில் அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், திமுக காங்கிரஸ் கூட்டணி, ஊழல் கூட்டணி என்றார். ஊழல் பற்றி பேசும் திமுகவும், காங்கிரசும் 2ஜி ஊழல் பற்றி திரும்பிப் பார்க்க வேண்டும் என அமித்ஷா விமர்சித்தார். கொரனோவாலிருந்து தமிழக மக்களை காப்பற்றியதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக பணியாற்றியதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.
திமுகவிற்கும் காங்கிரசுக்கும் மக்களை பற்றி கவலை இல்லை எனவும், பிரதமர் நரேந்தரி மோடி தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் அக்கறை கொண்டவர் என்றும் அமித்ஷா கூறினார். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடு கட்டிக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.







