அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கீடு- நீதிமன்றத்தில் அரசு பதில்

ராமநாதபுரம் அழகன்குளம் கிராமத்தில் அருங்காட்சியம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல…

ராமநாதபுரம் அழகன்குளம் கிராமத்தில் அருங்காட்சியம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அழகன்குளம் கிராமம் வைகை ஆறும், வங்காள விரிகுடா கடலும் சங்கமிக்கும் இடமாக அமைந்துள்ளது. சங்க காலங்களில் அழகன்குளம் கிராமம் கடல் வழி வணிக செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்கவும்: வடமாநில தொழிலாளர் விவகாரம்: சமூக வலைதளங்களில் போலி வீடியோ பரப்பியர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் பல
பழமையான பொருள்கள் கிடைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழ் கிராமிய எழுத்துக்கள், மணிகள், சோழ நாணயங்கள், ரோமன் உடனான வணிகம் ஆகியவற்றிற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் 1980-1987, 1990-1991, 1993-1994, 1995-1996, 1997-1998, 2014-2015, 2017 என பல முறை அகழாய்வு
நடைபெற்று உள்ளது.

அகழாய்வு பொருட்களை வயதை கண்டுபிடிக்கக் கூடிய கார்பன் முறை மூலம் சோதனை செய்ததில் கி.மு. 345, கி.மு. 268, கி.மு. 232 வருடங்களுக்கு முன்பு உள்ளது என தெரியவருகிறது. அழகன்குளம் கிராமத்தை அகழாய்வு செய்தவன் மூலம் 4 விதமான நூற்றாண்டுகளில் மக்கள் வாழ்ந்ததற்கான பொருள்கள் கிடைக்கப்பட்டுள்ளது.

எனவே, ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் கிடைக்கப்பெற்ற அகழாய்வு
பொருள்களைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்கவும்,
1980-1987, 1990-1991, 1993-1994, 1995-1996, 1997-1998, 2014-2015, 2017 ஆகிய காலங்களில் அழகன்குளம் கிராமத்தில் நடைபெற்ற அகழாய்வு குறித்த இறுதி அறிக்கையை
வெளியிடவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக
விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், 2015, 16 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் அறிக்கை தயார் செய்யப்பட்டு நிபுணர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அழகன்குளம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அழகன்குளம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக இடம்
ஒதுக்கப்பட்டு வருவாய் துறையிடமிருந்து தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், வழக்கினை உத்தரவிற்காக மார்ச் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.