விஷம் வைத்து கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கீடு

காரைக்காலில் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக சக மாணவியின் தாயாரால் விஷம் வைத்து கொல்லப்பட்ட மாணவன் பாலமணிகண்டன் குடும்பத்திற்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி தனியார் பள்ளியில்…

காரைக்காலில் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக சக மாணவியின் தாயாரால் விஷம் வைத்து கொல்லப்பட்ட மாணவன் பாலமணிகண்டன் குடும்பத்திற்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவர்
பாலமணிகண்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி
காரணமாக கடந்த 3ம் தேதி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை
செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து சக மாணவியின்
தாய் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், மாணவன் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உயிரிழந்த பாலமணிகண்டன் குடும்பத்திற்கு குடிசை மாற்று வாரிய
வீடு ஒதுக்கீடு செய்ய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார். இதனை
அடுத்து காரைக்காலில் உள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சிறுவனின் தந்தை ராஜேந்திரனிடம் குடிசை மாற்று வாரிய வீடு ஒதுக்கீடு செய்வதற்கான ஆணை மற்றும் சாவியை வழங்கினார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.